abbas

ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS
My title page contents
This is not an official site of PEC,VNB., EEE Dept. 2009 students site Created by Abbas,Thanks for visiting-visit again

Tuesday, August 30, 2011

Priyadarshini Engineering College


கல்லூரி நண்பர்களின் பிரிவு.......... 

ஊமையாய் அழுத என்னை......
உள்ளத்தால் நெகிழ வைத்த என் நட்பே....
காலங்கள் கடந்து சென்றாலும்........
திசைகள் திசை மாறினாலும்........
என்றென்றும் என்னுடனே இணைந்திருக்கும்....
என் அழகிய நிழலே...
திக்கி திரிந்த என்னை......
தித்திக்க வைத்த நட்பே...
தனிமையின் குணம் என்னவென்று தெரியாமல்....
இனிமையை அனுபவித்தோமே....
கல்லிலும் கண்ணீர் கசிய.....
கண்டோமே நாம் பிரிகையில்....
கைகோர்த்து தோள்சாய்ந்து நடந்த நாட்கள்........
இனி என்று வரும் என் நட்பே....
தாயின் கருவறையில் பிறந்த நாம்......
நட்பென்னும் கருவறையில்....
என்றென்றும் இணைந்திருப்போம்....
நண்பர்களாக......
AbbAs.,M.E.,
9894406645

கல்லூரி வாழ்க்கை முடிந்து ஆனது இரண்டு வருடம்....
மீண்டும் கல்லூரிக்கு ஒருநாள் சென்று வந்தேன்...
கல்லூரியில் பல மாறுதல்கள் முதல் மாறுதல் மாணவனாய் சென்ற நான்
அன்று பழைய மாணவனாய் அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்....
கல்லூரியின் படிக்கட்டுகளில் முன்னோக்கி ஏறினேன் ,
என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி அழைத்தது....
அதே படிக்கட்டில் ஜூனியர் மாணவன் ஒருவனோடு கட்டிபுரண்டு சண்டையிட்டது .
படிக்கட்டின் படிகளில் அமர்ந்து அரட்டை அடித்து மாணவிகளை வம்பிகிளுத்ததாய்
பல ஞாபகங்கள் என்னுள்....
தனிமை உணர்ந்ததில்லை… நான் அன்று உணர்ந்தேன்
என் நண்பர்கள் இல்லாத கல்லூரியில் நான் மட்டும் நடந்தபோது....
என் கண்கள் தேடிசென்று நின்றது எங்களது வகுப்பறையில்
என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்தேன்
என் இருப்பிடத்தை பார்த்தபோது....
மௌன மொழி பேசி எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது
நீ மட்டும்தான் வந்தாயா என்று.... இதயம் கனத்தது
என்னை அறியாமல் ஓர் வலி என்னில் தோன்ற என் சந்தோசத்தை மட்டுமே பார்த்த
என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது....
என் இருக்கையில் கிறுக்கி வைத்த என் நண்பர்களின் பெயர்களை
தொட்டு பார்த்து கலங்கியது கண்கள்....
கண்ணீரை தொடைத்து கொண்டு மெல்ல நடந்தேன் கேண்டீனை நோக்கி
ஒரு டீ வங்கி ஒன்பது பேர் குடிக்கும்போது உள்ள சுகம்
தனியாளாய் அன்று குடிக்கும்போது கிடைக்கவில்லை....
கேண்டீன் மரத்தடி , கல்லூரி பேருந்து என நாங்கள் களித்த இடங்களில்
நான் மட்டும் நின்று சற்று நேரம் கல்லூரி நாட்களில்
மீண்டும் வாழ்ந்து பார்த்தேன்....
காதல் வந்த தருணம் , காதல் சொல்லிய தருணம் , காதலில் வாழ்ந்த தருணம்
என என் நினைவுகள் நிழலாய் வந்தது....
அலைபேசியை எடுத்து என் நண்பர்கள் அனைவருக்கும்
தகவல் அனுப்பினேன் நான் கல்லூரியில் இருக்கேன் என்று
அனைவரும் reply செய்து நாங்கள் வாழ்ந்த நாட்களை
நினைவுபடுத்தி கொண்டனர் என்னோடு....
நான் கிளம்பும் நேரம்
கல்லூரியை ஏற இறங்க பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டு திரும்பி நடந்தேன்....
என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது
என் நினைவுகள் அனைத்துமே சுற்று சுவர் இல்லாத எங்கள் கல்லூரியை சுற்றி திரிந்தபடி....
மீண்டும் கிடைக்காத நிமிடங்கள்
மீண்டும் கிடைக்காத என ஏங்கும் நிமிடங்கள் கல்லூரி வாழ்கை..
Abbas....


gopi-johnson-abbas

gopi-johnson-abbas
photo was taken, while shanker sir send us out for disturbing class
ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS ABBAS